கடன் வழங்க சிறப்பு முகாம்
தேனியில் கூட்டுறவுத்துறை சார்பில் கடன் வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கூட்டுறவுத்துறையின் கீழ் தேனி மாவட்டத்தில் 80 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடன் சங்கங்களில் மத்திய கால விவசாயம் சார்ந்த கடன், பயிர்க்கடன், நகைக்கடன், சுயஉதவிக்குழுக்கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், விதவைகள் கடன், டாம்கோ மற்றும் டாம்செட்கோ கடன் போன்ற கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களிலும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடன் வழங்க சிறப்பு முகாம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு அனைத்து வகையான கடன்கள் பெறவும், உறுப்பினராக சேரவும் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.