நிலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்
நிலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம் நடந்தது.
பெரம்பலூர்
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் நிலப்பிரச்சினை தொடர்பான மனுக்களை விசாரிக்க சிறப்பு மனு முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி அறிவுரையின்பேரில், மாவட்ட போலீஸ் நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை சார்பில் ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆலத்தூர் வருவாய் வட்டாட்சியர் முத்துக்குமார் தலைமையில் நடந்த இந்த முகாமில் பெரம்பலூர் மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபுபக்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீஸ் ஏட்டுகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் மொத்தம் 9 மனுக்கள் பெறப்பட்டு அதில் 8 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story