ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 38 கிராம ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள்


ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 38 கிராம ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள்
x

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 38 கிராம ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

அரியலூர்

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளை தன்னிறைவு பெற்ற ஊராட்சிகளாக மாற்றும் நோக்கில் வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகளும் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) அன்று 38 கிராம ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இச்சிறப்பு முகாம்கள் அரியலூர் ஒன்றியத்தில் வாலாஜாநகரம், ரெட்டிப்பாளையம், கடுகூர், ஆலந்துறையார்கட்டளை, எருத்துகாரன்பட்டி, காவனூர், நாகமங்கலம், புங்கங்குழி ஆகிய கிராம ஊராட்சிகளிலும், செந்துறை ஒன்றியத்தில் மணப்பத்தூர், தளவாய், ஆலத்தியூர், அசவீரன்குடிகாடு, மணக்குடையான் ஆகிய கிராம ஊராட்சிகளிலும், திருமானூர் ஒன்றியத்தில் அழகியமணவாளன், ஏலாக்குறிச்சி, கீழகாவட்டாங்குறிச்சி, சின்னப்பட்டாக்காடு, கண்டிராதீர்த்தம், பூண்டீ ஆகிய கிராம ஊராட்சிகளிலும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் தழுதாலைமேடு, குந்தவெளி, முத்துசேர்வாமடம், கங்கை கொண்ட சோழபுரம், காட்டகரம், தத்தனூர், இறவாங்குடி ஆகிய கிராம ஊராட்சிகளிலும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் கூவத்தூர், அழகாபுரம், ஆண்டிமடம், பெரியகிருஷ்ணாபுரம், விளந்தை, இலையூர், சிலம்பூர் ஆகிய கிராம ஊராட்சிகளிலும், தா.பழூர் ஒன்றியத்தில் அம்பாப்பூர், சிந்தாமணி, தா.பழூர், வேம்புகுடி, பருக்கல், ஆகிய கிராம ஊராட்சிகளிலும் என மொத்தம் 38 கிராம ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம்களில் பட்டா மாறுதல், வண்டல் மண் எடுத்தல், பயிர் கடன் மற்றும் உழவர் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறுதல் மற்றும் அனுமதி வழங்குதல், பயிர் காப்பீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு குறித்த பணிகள் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம்களில் விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story