வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள்


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள்
x

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் அரியலூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

அரியலூர்

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதா? என்பதை கண்டறிவதற்காகவும், நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வாக்குச்சாவடிகளில் செப்டம்பர் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் வாக்காளர்கள் படிவம் 6 பி-யில் தங்கள் ஆதார் எண்ணை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கொடுத்து வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம் என்று தேர்தல் பிரிவு அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story