சிறப்பு தூய்மை திட்டப்பணிகள்
பென்னாத்தூரில் சிறப்பு தூய்மை திட்டப்பணிகள்
வேலூர்
அடுக்கம்பாறை
வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் பேரூராட்சியில் சிறப்பு தூய்மை திட்டப்பணிகள் நடைபெற்று.
பேரூராட்சி தலைவர் பவானி சசிகுமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜீவசத்தியராஜ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் அர்ச்சுனன் வரவேற்றார்.
இதில் வார்டு கவுன்சிலர்கள் அண்ணாதுரை, கருணாகரன், தமிழரசி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டு ஏரி மற்றும் நீர்வரத்து கால்வாய் மீது மரக்கன்றுகள் நடுதல், திறந்தவெளி கிணற்றில் உள்ள குப்பைகள் அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டனர்.
மேலும் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு தூய்மை திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story