சிறப்பு தூய்மைப் பணி


சிறப்பு தூய்மைப் பணி
x

மயிலாடுதுறையில் சிறப்பு தூய்மைப் பணி நடந்தது.

மயிலாடுதுறை

நகராட்சி பகுதிகளில் திடக்கழிவுகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கும் வகையில் அரசின் சிறப்பு பணியான 'என் குப்பை எனது பொறுப்பு' என்ற சிறப்பு தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மயிலாடுதுறை சின்ன மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் யுரேகா தலைமை தாங்கினார். நகரசபை தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சனல்குமார் வரவேற்று பேசினார். இதில், ராஜகுமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு சிறப்பு தூய்மைப்பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மேலும், நகராட்சியால் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட உரத்தினை மஞ்சப்பையில் வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். இதில், சுற்றுச்சூழல் ஆர்வலர் அறிவழகன், நகரசபை உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story