சிறப்பு தூய்மை பணி


சிறப்பு தூய்மை பணி
x

நெல்லையில் சிறப்பு தூய்மை பணி நடைபெற்றது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் படி துணை ஆணையர் தாணுமாலை மூர்த்தி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோர் ஆலோசனைபடி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை செயல்படுத்தும் வகையில் நெல்லை மாநகராட்சியில் ஒவ்வொரு மாதமும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் சிறப்பு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மேலப்பாளையம் தைக்கா தெரு பகுதிகளில் சிறப்பு தூய்மை பணி நேற்று நடந்தது.இதில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலப்பாளையம் பகுதி தி.மு.க.செயலாளர் துபாய் சாகுல், மாநகராட்சி பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கலைச்செல்வி, மாயாண்டி, வேலு பிரபாகரன், எல்.சி.எப். பணியாளர்கள் நவீன், இக்பால் மற்றும் மேற்பார்வையாளர் யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தச்சநல்லூர் மண்டலம் கைலாசபுரம் பகுதி தைப்பூச மண்டபம் அருகே மரக்கன்றுகள் நடப்பட்டது.இதில் மண்டல தலைவர் ரேவதிபிரபு சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர் விழா சிறப்பாக நடைபெற்றது.

நெல்லை மண்டலத்தில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.


Next Story