அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சிறப்பு சைபர் போலீஸ் குழு


அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சிறப்பு சைபர் போலீஸ் குழு
x
தினத்தந்தி 16 Jun 2022 5:26 PM IST (Updated: 16 Jun 2022 5:34 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சிறப்பு சைபர் போலீஸ் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சிறப்பு சைபர் போலீஸ் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சைபர் போலீஸ் குழு

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் சைபர் குற்றங்கள் சம்மந்தமாக வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 போலீசார் அடங்கி சைபர் போலீஸ் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினருக்கான பயிற்சி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார்.

புகார் மீது உடனடி நடவடிக்கை

அப்போது, சைபர் போலீஸ் குழுவினர்அந்தந்த போலீஸ் நிலையங்களிலேயே சைபர் குற்றங்கள் சம்மந்தமான புகார்களை பெற வேண்டும். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். புகாரளிக்க வரும் பொதுமக்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும். பொதுமக்களிடம் இருந்து ஓ.டிபி. மூலம் மோசடியாக பணம் எடுக்கப்பட்டாலோ அல்லது போலியான செயலிகளை தரவிறக்கம் செய்து உங்கள் தகவல்கள் திருடப்பட்டாலோ அல்லது வேறு வகையிலோ பண இழப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் 24 மணி நேரத்தில் சைபர் குற்ற பிரிவு அறிவித்துள்ள இலவச தொலைபேசி எண்ணான 1930 ஐ தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். வேறு ஏதேனும் சைபர் குற்றங்கள் தொடர்பாக https://cybercrime.gov.in/ என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

பயிற்சியில் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், சப்-இன்ஸ்பெக்டர் சுாதாகரன், தகவல் தொழில் நுட்ப சப்-இன்ஸ்பெக்டர் அச்சுதன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story