ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்


ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
x

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

நாகப்பட்டினம்

தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் வைராக்கிய ஆஞ்சநேயர் தனிசன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். நேற்று அமாவாசையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ணமலர்களால் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மகாமண்டபத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் எதிரே உள்ள ஆஞ்சநேயருக்கு அமாவாசையையொட்டி காலை முதல் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் சாமிக்கு வண்ண மலர்களாலும், வெற்றிலை- வடை மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். அதேபோல் நாகக்குடையான் சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும், வேட்டைக்காரனிருப்பு கோவில்பத்து கிராமத்தில் எனையாளும் கண்ணப்பெருமான் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும் அமாவாசையையொட்டி சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story