முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
ஆடி வெள்ளியையொட்டி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி இரண்டாம் வெள்ளி விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. முத்து மாரியம்மனுக்கு புதுக்கோட்டை தண்டு மாரியம்மன் அலங்காரம் செய்ய்யப்பட்டது. சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆடி வெள்ளி விழாவை முன்னிட்டு வாணவேடிக்கை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சந்தைக்கோடியூர் பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story