வடுக பைரவருக்கு சிறப்பு அலங்காரம்


வடுக பைரவருக்கு சிறப்பு அலங்காரம்
x

சிங்கம்புணரி அருகே வடுக பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தர்மஷம்வர்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் ரவி குருக்கள் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து வடுக பைரவருக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர் மாலைகளுடன் மகா தீபம் காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடுக பைரவரை தரிசித்தனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story