பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி


பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

ஈஸ்டர் பண்டிகை

தஞ்சை மாவட்டத்தின் பெருமைமிக்க கிறிஸ்தவ பேராலயம் பூலோகம் போற்றும் பூண்டி மாதா பேராலயம். பூண்டி மாதா பேராலயத்தில், ஏசுநாதர் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கி நேற்று அதிகாலை வரை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். நேற்று முன்தினம் இரவு ஏநாதர் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் புதிய நெருப்பு உண்டாக்கப்பட்டு அதனை மந்திரித்து அதிலிருந்து பாஸ்கா திரி எனப்படும் பெரிய மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றப்பட்டது. இந்த மிகப்பெரிய மெழுகுவர்த்தியில் சிலுவை அடையாளம் வரையப்பட்டிருந்தது. ஏசுவின் 5 காயங்களை நினைவுபடுத்தும் விதமாக பெரிய மெழுகு திரியில் 5 மணிகள் பதிக்கப்பட்டது.

சிறப்பு திருப்பலி

ஒளியேற்றப்பட்ட பெரிய மெழுகுவர்த்தியை பூண்டி பேராலய அதிபர் சாம்சன் கையில் ஏந்தியவாறு திருப்பலி மேடைக்கு வந்தார். விழாவில் கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றிக்கொண்டு திருப்பலியில் கலந்து கொண்டனர் . இந்த சிறப்பு திருப்பலியில் பேராலய துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மிக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பட்டுவேட்டி, அங்கவஸ்திரம்

ஏசு உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் பீடத்தின் அருகில் பட்டு வேட்டி, பட்டு அங்கவஸ்திரம் அணிந்த உயிர்த்தெழுந்த ஏசுவின் சொரூபத்தை பேராலய அதிபர் திறந்து வைத்தார். பூண்டி மாதா பேராலயத்தில் நேற்று காலை, நண்பகல், மாலையில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி நடந்தது. இதல் திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story