நெல் ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்பு கண்காட்சி


நெல் ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்பு கண்காட்சி
x

அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்பு கண்காட்சி நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதிலும், பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் பணிகளிலும் வேளாண்மை உழவர் நலத்துறை மூலமாக உயர்தர உள்ளூர் ரகங்களை கண்டறிந்து அவற்றை பிரபலப்படுத்துவதற்கும் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் அந்தந்த பகுதிக்கேற்றவாறு சிறந்த ரகங்களை உருவாக்கும் வகையில் தேவையான அடிப்படை மரபணுக்களை பராம்பரிய ரகங்களில் கண்டறிந்து பயன் படுத்தி கொள்ளவும் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் சுந்தர் டேனியல் பாலஸ் வரவேற்று பேசினார். நெல்லை வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) அசோக்குமார் விழாவின் நோக்கம் பற்றி விளக்கம் அளித்தார். நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா தலைமை உரை ஆற்றினார். அம்பை நகராட்சி தலைவர் பிரபாகரன், யூனியன் சேர்மன் பரணி சேகர்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அம்பாசமுத்திரம் சுற்று வட்டார விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளை வேளாண்மை துறை அதிகாரிகள் வழங்கினர். அம்பை வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.


Next Story