சிறுதானிய விவசாயிகளுக்கு சிறப்பு வசதி


சிறுதானிய விவசாயிகளுக்கு சிறப்பு வசதி
x

மாவட்டத்தில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சிறுதானிய விவசாயிகளுக்கு சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்

மாவட்டத்தில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சிறுதானிய விவசாயிகளுக்கு சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

விற்பனை கூடங்கள்

விருதுநகர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த சிறுதானிய விளை பொருட்களை உலர வைக்க உலர்களம், பரிவர்த்தனை கூடம், ஏல நடவடிக்கை மேற்கொள்ள வேளாண்ஏலக் கொட்டகைகள், சிறுதானிய விளை பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள சேமிப்பு திட்டங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த சிறுதானிய விளை பொருட்களை 15 நாட்கள் வரை எவ்வித வாடகை இல்லாமல் விற்பனை கூடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிறுதானிய ஆண்டு

2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த மக்காச்சோளம், சோளம், குதிரைவாலி, கேழ்வரகு, வரகு, பனி வரகு, திணை போன்ற சிறுதானியங்களை நன்கு உலர வைத்து சேமித்து வைத்திட மேற்கண்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாய உற்பத்தியாளர்குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்த மதிப்புக்கூட்டிய பொருட்களை குறைந்த வாடகைக்கு இருப்பு வைத்திட விருதுநகரில் 100 மெட்ரிக் டன், ராஜபாளையத்தில் 25 மெட்ரிக் டன், அருப்புக்கோட்டையில் 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிட்டங்கிகள் இயங்கி வருகின்றன.

மாத வாடகை

இதனை தினசரி வாடகை அல்லது மாத வாடகை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனவே சிறுதானிய சாகுபடி விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த சிறுதானிய பொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இருப்பு வைத்து ஒழுங்குமுறை விற்பனை கூட வசதிகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story