மைசூருவில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்புக்கட்டண ரெயில்
மைசூருவில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்புக்கட்டண ரெயில் மதுரை வழியாக இயக்கப்படுகிறது.
தென்மேற்கு மண்டல ரெயில்வே சார்பில், கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு பண்டிகை கால சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, மைசூருவில் இருந்து இந்த ரெயில் (வ.எண்.06253) வருகிற 4-ந் தேதி, 11 மற்றும் 18-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமைதோறும் மதியம் 12 மணிக்கு புறப்படுகிறது. நள்ளிரவு 1.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி ரெயில் நிலையம் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06254) வருகிற 5-ந் தேதி, 12 மற்றும் 19-ந் தேதிகளில் சனிக்கிழமைதோறும் மாலை 3 மணிக்கு புறப்படுகிறது. மாலை 5.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. காலை 8.30 மணிக்கு மைசூரு ரெயில் நிலையம் சென்றடைகிறது.
இந்த ரெயிலில், ஒரு 2-அடுக்கு குளுரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பார்சல் பெட்டிகளுடன் இணைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டிகள் மட்டும் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரெயில்கள், கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு கன்டோண்மென்ட், பெங்களூரு, கெங்கேரி, மாண்டியா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் வழக்கமான கட்டணத்தை விட 1.3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.