சிறப்பு கிராமசபை கூட்டம்
வெம்பக்கோட்டை அருகே சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயகரிசல்குளம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கங்காள ஈஸ்வரி தலைமையில் நடைபெற்றது. செவல்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி தலைமையிலும், வெம்பக்கோட்டையில் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் தலைமையிலும், தாயில்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி தலைமையிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதேபோல பேர்நாயக்கர்பட்டி, பனையடிப்பட்டி, ராமுதேவன் பட்டி, சிப்பிப்பாறை, சங்கரபாண்டிபுரம், சல்வார்பட்டி, சுப்பிரமணியபுரம், விஜயரங்கபுரம், ஆகிய ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story