சிறப்பு கிராம சபை கூட்டம்
சிறப்பு கிராம சபை கூட்டம்
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் இலக்கியராமு தலைமையில் நடைபெற்றது. யூனியன் கவுன்சிலர் சாந்தி செங்கைராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில். திருவாடானை ஊராட்சியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் சீரான குடிநீர் வினியோகம் நடைபெறுவதில் பெரும் பிரச்சினை இருந்து வருகிறது. எனவே புதிதாக ஆழ்குழாய் அமைத்து சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாடானை மயானத்தில் முட்புதர்கள் மண்டி கிடப்பதை சீரமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜென்சி ராணி, ஊராட்சி துணைத் தலைவர் மகாலிங்கம், செயலாளர் சித்ரா, வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story