சிறப்பு கிராமசபை கூட்டம்


சிறப்பு கிராமசபை கூட்டம்
x

சிறப்பு கிராமசபை கூட்டம்

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட நிலையூர் முதல் பிட் (கூத்தியார்குண்டில்) மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பசும்பொன் தலைமை தாங்கினார்.ஊராட்சி செயலர் ரவி கிருஷ்ணன் வரவேற்றார். துணைத் தலைவர் பானுமதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சமூக தணிக்கை வட்டாரஅலுவலர் குமார் கலந்து கொண்டு கடந்த 2020-2021 மற்றும் 2021-2022-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்ற பணிகளை தணிக்கை செய்தார். மேலும் இந்த திட்ட பணிகள் குறித்து குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர். கிராமசபை கூட்டத்தில்வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஊராட்சி அலுவலகம் முன்புசமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.


Next Story