சிறப்பு கிராம சபை கூட்டம்
தச்சக்காடு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
கடலூர்
பரங்கிப்பேட்டை
பரங்கிப்பேட்டை அருகே தச்சக்காடு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிவசங்கரி ராம்மகேஷ் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு அரசு கட்டிக் கொடுத்த வீடுகளை பழுது நீக்கம் செய்ய கணக்கெடுக்கும் பணியை நடத்துவது, ஊராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் எழிலரசி துரை நன்றி கூறினார்.
Related Tags :
Next Story