சிறப்பு கிராம சபை கூட்டம்
கவரை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு
செஞ்சி
செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கவரை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் தலைவர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசினார். அப்போது கவரை ஊராட்சியில் ரூ.38 லட்சம் மதிப்பில் செயல்படுத்த உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் கவரை ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் விளக்க உரையாற்றினார். மேலும் அவர் பேசும்போது, பொதுமக்கள் குறைகளை சொன்னால் அவைகள் கிராம சபை மூலம் கோரிக்கையாக வைக்கப்பட்டு தீர்த்து வைக்கப்படும் என்றார். அதன்படி பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் கிராம சபையில் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடசுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் பனிமலர் ராஜாராம், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சதீஷ், தாட்சாயினி, சங்கர், தினேஷ், கலைவாணி, சிவகாமி, பூங்காவனம், பச்சையம்மாள், ஊராட்சி செயலாளர் கனகா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.