121 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம்; 9-ந் தேதி நடக்கிறது


121 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம்;  9-ந் தேதி நடக்கிறது
x

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் வருகிற 9-ந் தேதி நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டிற்கான பணிகளை தேர்வு செய்தல் மற்றும் தொழிலாளர் மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்தல் குறித்து கால அட்டவணை நிர்ணயம் செய்திட தெரிவிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அன்று நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 2023-2024-ம் ஆண்டிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படவுள்ள அனைத்து பணிகளையும் கண்டறிந்து ஊராட்சிகள் வாரியாக பணிகளை தேர்வு செய்தல் மற்றும் தொழிலாளர் மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்து ஒப்புதல் பெற தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்)-ஆல் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story