193 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
நாகை மாவட்டத்தில் குடியரசு தின விழாவையொட்டி 193 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.
நாகை மாவட்டத்தில் குடியரசு தின விழாவையொட்டி 193 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறப்பு கிராம சபை கூட்டம்
குடியரசு தின விழாவையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள 193 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெறகிறது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், 2022-23-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள், கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது.
ஜல்ஜீவன் இயக்கம்
மேலும் ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர், ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பண்ணை சார்ந்த தொழில்கள் மற்றும் பண்ணை சாரா தொழில்கள் வரவு-செலவு விவரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
கிராம ஊராட்சிகளில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான நடவடிக்கை, சாலை பாதுகாப்பு, ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு, குழந்தைகள் மற்றும் முதியோர்கள் உதவி எண்கள் ஆகியவை குறித்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே விவாதங்கள் நடக்க உள்ளது.
கோரிக்கைகள்
கூட்டத்தில் அனைத்து பொதுமக்கள், கிராமத்தை சார்ந்த அரசு அலுவலர்கள், ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாது கலந்துகொண்டு கோரிக்கைகள் தொடர்பான விவரங்களை விவாதிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.