193 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்


193 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் 193 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 193 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.

இதுகுறித்து கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு கிராம சபை கூட்டம்

நாகை மாவட்டத்தில் உள்ள 193 கஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினத்தையொட்டி வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணியளவில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியில் தண்ணீர் மற்றும் சுகாதார நெருக்கடியை தீர்க்க மாற்றத்தினை துரிதப்படுத்துதல், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், 2022-23-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள், கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு

மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம், கிராம வளர்ச்சி திட்டம், கிராம ஊராட்சிகளில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

எனவே இந்த கூட்டத்தில் பொதுமக்கள், கிராமத்தை சார்ந்த அரசு அலுவலர்கள், ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story