முதல்வரின் முகவரி துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம்
குத்தாலத்தில் முதல்வரின் முகவரி துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது.
மயிலாடுதுறை
குத்தாலம்:
குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில் முதல்வரின் முகவரி துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. பொதுமக்களிடம், மனுக்களை மயிலாடுதுறை சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி பெற்றுக்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என்றார். முகாமில் குத்தாலம் தாசில்தார் கோமதி, குத்தாலம் தனி தாசில்தார் சண்முகம், தலைமை இடத்து துணை தாசில்தார் பாபு, வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் பரமானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story