மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்


மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்
x

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்

திருவாரூர்

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் வருகிற 3-ந்தேதி நடக்கிறது.

சிறப்பு குறைதீர் கூட்டம்

திருவாரூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 3.8.2023 அன்று காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வுகாணும் வகையில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. . கூட்டத்தில் திருவாரூர் கோட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்துபூர்வமாக அளிக்கலாம். அன்றைய தினம் மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீதான உள்ள கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும்.

வாக்காளர் அடையாள அட்டை

மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு குறைகளுக்கு தீர்வுகாணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒருங்கிணைந்த அடையாள அட்டை பெற இதுவரை விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் இருப்பிட முகவரிக்கான ஆதாரம், குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல்- நகல், தற்போதைய புகைப்படம் ஆகியவற்றின் அசல்- நகலுடன் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.

கிராம நிர்வாக அலுவலர்களிடம் சான்றிதழ்

உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடு மற்றும் நூறு நாள் அட்டை கோருபவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம். இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்தவர் அதற்கான ஆதாரத்தை தவறாது கொண்டு வரவேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாத உதவித்தொகை ரூ.2000 பெறுபவர்கள் மட்டும் 2023-2024-ம் ஆண்டிற்கு மாற்றுத்திறனாளி நல்ல நிலையில் உள்ளார் என கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற சான்றிதழுடன் குறைதீர் கூட்டத்திற்கு வந்து சமர்ப்பிக்கலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று கலெக்டர் சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story