மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்


மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
x

திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

திருவாரூர்


திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. கூட்டத்தில் திருவாரூர் கோட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை எழுத்துபூர்வமாக அளிக்கலாம். மேலும் மனுஅளித்த உடனே கோரிக்கைகளுக்கு ஏற்ப மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும். கோரிக்கை மனுக்கள் அனைத்து அரசின் விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு குறைகளுக்கு தீர்வுகாணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவிதொகை, வீட்டுமனைபட்டா, பட்டா இருந்தால் தொகுப்பு வீடு, நூறுநாள் வேலை அட்டை, தனியார் துறையில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விண்ணப்பங்கள் அளிக்கலாம். யு.டி.ஐ.டி. அட்டை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குடும்ப அட்டை, மாற்றுதிறனாளிகள் தேசிய அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால் அதற்கான ஆதாரங்கள், தொடர்புடைய கடிதங்கள் ஆகியவற்றை கொண்டு வரலாம். எனவே கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story