மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் 3 இடங்களில் நடக்கிறது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் கலெக்டர் தலைமையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மூன்றாவது வியாழக்கிழமையும், திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் முதல் வியாழக்கிழமையிலும், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் இரண்டாவது வியாழக்கிழமையும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடைபெறவுள்ளது.
எனவே, மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story