சிறப்பு குறைதீர்வு வார நிகழ்ச்சி


சிறப்பு குறைதீர்வு வார நிகழ்ச்சி
x

சிறப்பு குறைதீர்வு வார நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர்

குளித்தலையில் முதல்வரின் முகவரித்துறை சிறப்பு குறைதீர்வு வார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தொடங்கி வைத்தார். இதில் வருவாய் துறை சார்பில் அரசு திட்டங்கள் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், பிறப்பு முதல் இறப்பு வரையிலான பல்வேறு சான்றிதழ்கள் பெறுதல் தொடர்பாகவும், தோட்டக்கலை, வேலை வாய்ப்பு மையம், மாவட்ட தொழில் மையம், வேளாண்துறை ஆகியவை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் வழங்கப்படும் உதவிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு கல்வி தொடர்பான முறைகள் விளக்கி கூறப்பட்டன. மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் தொடர்பான பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் வட்டாட்சியர் கலியமூர்த்தி, மண்டல இடத்து துணை வட்டாட்சியர் வைரபெருமாள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story