சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம்
சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி வேலாயுதம் சாலையில் உள்ள இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழிலுக்கான சிறப்பு தொழிற்கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு ரூ.3 கோடி மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தொழில் கடன் பெற்று பயன்பெற்று வரும் வாடிக்கையாளர்களை கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பொது மேலாளர் துரைராஜ், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மண்டல மேலாளர் முருகேசன், இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகத்தின் தலைவர் பாலமுருகன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சிவகாசி கிளை மேலாளர் கஸ்தூரி, சிவகாசி தாசில்தார் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.