இயேசுவின் திரு இருதய அற்புத கெபியில் சிறப்பு திருப்பலி
திருச்செந்தூர் ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபியில் சிறப்பு திருப்பலி நடந்தது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி தேவாலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. ஆலந்தலை பங்குத்தந்தை ஜெயக்குமார் தலைமையில் உதவி பங்குதந்தை பாலன், திருத்தொண்டர்கள் பாக்யபவுல், சதீஸ் ஆகியோர் சிறப்பு திருப்பலி நடத்தினர். பின்னர் குடில் போட்டிக்கான பரிசும் வழங்கப்பட்டன. மேலும், ஊர்நலக்கமிட்டியினர் கலந்து கொண்ட அனைவருக்கும் கேக் வழங்கினர். இதில், திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெயகுமார், பரிசுத்த ரொசாரி சபை பெருந்சேந்தியார் ஜேம்ஸ், ஊர்நல கமிட்டி தலைவர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள், அமலோற்பவ மாதா சபை இளம்பெண்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story