சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம்


சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம்
x

ஆம்பூர் அருகே சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் மற்றும் மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாந்தி சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் பொன்னி கப்பல்துரை, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோமதி வேலு, கார்த்திக் ஜவகர், கால்நடை மருத்துவர் சைலஜா மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story