சிறப்பு மருத்துவ முகாம்


சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 15 Oct 2023 12:15 AM IST (Updated: 15 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொய்க்குணத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே உள்ள பொய்க்குணம் கிராமத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அன்புஅன்பரசு தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் தனவேல், துணை தலைவர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் சரவணன் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில் டாக்டர்கள் முத்துக்குமரன், உமாசங்கரி, சுகன்யா, சுகந்தி மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு ரத்தம், சிறுநீர், இ.சி.ஜி., கண், தோல் பரிசோதனை, சித்த மருத்துவம், கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் பாசில், வள்ளி, ஊராட்சி செயலாளர் கதிரேசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story