சிறப்பு மருத்துவ முகாம்


சிறப்பு மருத்துவ முகாம்
x

குத்தாலம் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம் அருகே வாணாதிராஜபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் கோபி, ஊராட்சி மன்ற தலைவர் சங்கரி தமிழரசன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் வரவேற்றார். இதில், மயிலாடுதுறை எம்.எல்.ஏ. எஸ்.ராஜகுமார் கலந்து கொண்டு முகாமினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.முகாமில் ஆண், பெண்களுக்கான பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம், ஸ்கேன், ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான மருந்து, மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், கொரோனா தடுப்பூசி முகாமும் நடந்தது. முகாமையொட்டி, அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், கீரை வகைகள், இணை உணவு, டெங்கு குறித்து விழிப்புணர்வு புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.







Next Story