சிறப்பு மருத்துவ முகாம்


சிறப்பு மருத்துவ முகாம்
x

சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

வேலூர்

குடியாத்தம் அடுத்த எர்தாங்கல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் கே.கே.வி.அருண்முரளி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உத்திரகுமாரி, ஊராட்சி மன்ற தலைவர் அம்மு நெடுஞ்செழியன், துணைத் தலைவர் ஜி.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.விமல்குமார் திட்ட விளக்க உரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தினர். ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை, எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கான சிறப்பு பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்றது. மொத்தம் 1,126 பேர் கலந்துகொண்டு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனர், 35 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். சித்த மருத்துவத்தில் 105 நபர்கள் சிகிச்சை பெற்றனர்.

நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர்.எஸ்.பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சரவணன், ஊராட்சி செயலாளர் குமாரவேல் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story