சிறப்பு மருத்துவ முகாம்


தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே சி.பா.சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணாபாய் தலைமை தாங்கினார். ராயகிரி நகர பஞ்சாயத்து தலைவர் இந்திரா, துணைத்தலைவர் குறிஞ்சி மகேஸ், செயல் அலுவலர் சுதா, மருத்துவ அலுவலர் கிருபா, சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி, சுகாதார செவிலியர் பார்வதி, மருத்துவம்சாரா மேற்பார்வையாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வெங்டகிருஷ்ணன் வரவேற்று பேசினார். சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., யூனியன் தலைவர் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் பொதுமக்களுக்கு அனைத்து நோய்களுக்கும் சிறப்பு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இயற்கை காய்கறிகள், கீரை வகைகள், தானிய வகைகள், சத்து மாவு கொலுக்கட்டை, பாசிப்பருப்பு பாயாசம், சர்க்கரை பொங்கல் ஆகியவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.

இந்து நாடார் உறவின்முறை தலைவர் அம்மையப்பன், செயலர் சண்முகானந்தம், சி.பா.சிவந்தி ஆதித்தனார் மேல் நிலைப் பள்ளி கமிட்டி செயலர் கணேசன், தலைமை ஆசிரியர் வெங்கடகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன், ஆசிரியர்கள் நாராயணன், நாகராஜ், பாபு, இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள், மதிமுக கிருஷ்ணகுமார், ஜாகீர் உசேன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மனோகரன், விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ரவிக்குமார் செய்திருந்தார்.


Next Story