சத்துவாச்சாரியில் சிறப்பு மருத்துவ முகாம்
சத்துவாச்சாரியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
வேலூர்
வேலூர் மாநகராட்சி சார்பில் 18-வது வார்டு சத்துவாச்சாரி முருகன் கோவில் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. சத்துவாச்சாரி நகர்புற சுகாதார அலுவலர் டாக்டர் கண்மணி தலைமை தாங்கினார். இதில் கண், காது, இதயம், தோல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அரசு டாக்டர்கள் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அவர்கள் முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு ரத்தம், சர்க்கரை பரிசோதனைகள் செய்தனர். மேலும் உடல்நலம் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. சிலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தப்பட்டது.
இதில் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story