வளரிளம் பருவத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம்


வளரிளம் பருவத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம்
x

மனவிடுதி அரசு பள்ளியில் வளரிளம் பருவத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட மனவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் வளரிளம் பருவத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் வட்டார மருத்துவ அலுவலர் பொன்.சரவணன் தொடங்கி வைத்தார். மருத்துவ முகாமில் 176 மாணவர்களுக்கு ரத்தசோகை, கண் மற்றும் பல் பரிசோதனை நடைபெற்றது. இதில் 2 மாணவருக்கு ரத்த சோகையும், 12 மாணவர்களுக்கு பார்வைத்திறன் குறைபாடும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, ரத்தசோகையுடைய 2 மாணவர்களுக்கு மேல் சிகிச்சை பெற அறிவுறுத்தியும், பார்வைத்திறன் குறைபாடுடைய 12 மாணவர்களுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் மூலம் கண் கண்ணாடி வழங்கிடவும் பரிந்துரைக்கப்பட்டது. இந்த முகாமில் மருத்துவ அலுவலர் வகிதாபானு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வைத்திலிங்கம், சமுதாய சுகாதார செவிலியர் சுமிதா ஜான்சி, பல் டாக்டர் திலீபா, சுகாதார ஆய்வாளர்கள் குழந்தைவேல், முகமது சகி, ஆய்வக நுட்புணர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story