கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்


கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 2 Jan 2023 12:08 AM IST (Updated: 2 Jan 2023 3:51 PM IST)
t-max-icont-min-icon

கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

கரூர்

வேலாயுதம்பாளையம் கால்நடை மருத்துவமனை சார்பாக புகழூர் செம்படபாளையம் பகுதியில் கால்நடைகளுக்கான பெரியம்மை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடை மருத்துவர் கண்ணன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி போட்டனர். பின்னர் விவசாயிகளுக்கு கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும், கால்நடைகளுக்கு புரதம் சத்து நிறைந்த பசுந்தீவன உற்பத்தி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல் மாவத்தூரில் நடந்த கால்நடைகளுக்கான சிறப்பு முகாமிற்கு மாவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில் மோகன் தலைமை தாங்கினார். முகாமில் கால்நடை உதவி மருத்துவர் பிரேம்குமார் தலைமையில் மருத்துவர்கள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து சிறந்த கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மை விருதுகள் 3 பேருக்கு வழங்கப்பட்டன.


Next Story