கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்


கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவிழந்தூரில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை திருவிழந்தூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு திருவிழந்தூர் ஊராட்சி தலைவர் சேட்டு தலைமை தாங்கினார். முகாமில் கால்நடைத்துறை உதவி மருத்துவர் தர்மராஜ், கால்நடை ஆய்வாளர் சிவசங்கரி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் கலைச்செல்வி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சையும், மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் ஊசி, சினை பரிசோதனை, மலடு நீக்கம், ஆன்மை நீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், பெரியம்மை தடுப்பூசி ஆகிய சிகிச்சைகளை அளித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.


Next Story