உயர் ரத்த அழுத்தம் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் 100 இடங்களிலும் உயர் ரத்த அழுத்தம் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் 100 இடங்களிலும் உயர் ரத்த அழுத்தம் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிறப்பு முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் இன்று உலக உயர் ரத்த அழுத்த நோய் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களிலும், பொதுமக்கள் கூடும் 100 இடங்களிலும் உயர் ரத்த அழுத்த நோய்கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடத்தப்பட உள்ளது.
உயர் ரத்த அழுத்த நோய் என்பது மனிதனின் உடலில் வெளியே தெரியாமல் உள்ளிருக்கக்கூடிய ஒரு முக்கியமான பிரச்சினை. மேலும் தற்காலத்தில் உள்ள அவசர வாழ்க்கை முறையாலும் முறையான உணவு பழக்கங்கள் இல்லாத காரணத்தினால் பெரும்பாலான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
ரத்த அழுத்தம்
எனவே 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இம் முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் ரத்த அழுத்தத்தின் அளவு கண்டறியப்பட்டு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அழுத்தம் இருப்பின் அதற்கான சிகிச்சையை ஆரம்பத்திலேயே மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். அத்துடன் உயர் ரத்த அழுத்த நோயின் தாக்கத்தால் உடலில் ஏற்படும் முக்கியமான உடலுறுப்பின் பாதிப்புகளான இருதய நோய், கண் பார்வை பாதிப்பு, சிறுநீரக கோளாறு போன்றவை ஏற்படாத வண்ணம் பாதுகாத்துக் கொள்ளலாம். எனவே இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.