மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்றது.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். முகாமில் 400-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கான மருத்துவ சான்றுகளை அரசு சிறப்பு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மேலும் அடையாள அட்டை பெற்றவர்களுக்கான மத்திய அரசின் ஸ்மார்ட் கார்டு 137 நபர்களுக்கும், மருத்துவ காப்பீடு திட்டத்தின் அடையாள அட்டை 103 நபர்களுக்கும் வழங்கப்பட்டது. அரசு நலத்திட்ட உதவிகள் பெற 87 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
முகாமில் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட 37 நபர்களுக்கு நவீன செயற்கை கால்கள் மற்றும் கைகள் வழங்கிடுவதற்காக மருத்துவ காப்பீடு திட்டம் பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கு அளவீடு செய்ய சென்னை எண்டோலைட் நிறுவனத்தைச் சேர்ந்த மேற்பார்வையாளர் 5 பேர் கொண்ட குழுவினர் நேரில் வரவழைக்கப்பட்டு அளவீடு மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பு முகாமினை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் ஒருங்கிணைப்பு செய்தார்.