மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.
அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.
மருத்துவ முகாம்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்தும் பிறப்பு முதல் 18 வயது வரை மாற்றுத்திறன் உடைய குழந்தைகளுக்கு கீழ்க்கண்டவாறு ஒன்றிய அளவில் மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ சான்றுடன் அடையாள அட்டை வழங்குதல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அடையாள அட்டை பெறுவதற்கு தேவையான ஆவணங்களுடனும் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முகாம் நடைபெறும் விவரம்
22-ந் தேதி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி, 26-ந் தேதி நரிக்குடி யூனியன் தொடக்கப்பள்ளி, 29-ந் தேதி கல்குறிச்சி யூனியன் தொடக்கப்பள்ளி, அக்டோபர் 3-ந் தேதி அரசு மேல்நிலைப்பள்ளி எம்.ரெட்டியபட்டி, 5-ந் தேதி அருப்புக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 10-ந் தேதி ராஜபாளையம் எஸ்.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளி, 13-ந் தேதி சாத்தூர் எட்வர்டு நடுநிலைப்பள்ளியில் முகாம் நடக்கிறது.
அதேபோல 17-ந் தேதி வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, 19-ந் தேதி மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, அக்டோபர் 21-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி, அக்டோபர் 26-ந் தேதி சிவகாசி நகராட்சி ஏ.பி.டி. உயர்நிலைப்பள்ளியி்ல் நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.