மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை இணைந்து வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாைம நடத்தியது. முகாமிற்கு தலைமை ஆசிரியர் தெய்வ பாஸ்கரன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முகாமில் டாக்டர்கள் குழுவினர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து அவர்களுக்கு மருத்துவச்சான்று வழங்கினர். முகாமில் 87 பேருக்கு அடையாள அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 58 பேர் மருத்துவ உதவி உபகரணங்கள் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முகாமில் வட்டார கல்வி அலுவலர்கள் செல்லதுரை, சுகந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.