கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்


கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
x

ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

வேலூர்

அடுக்கம்பாறை

வேலூர்மாவட்டம், கணியம்பாடியை அடுத்த துத்திக்காடு ஊராட்சியில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி இதனை தொடங்கி வைத்தார்.

கணியம்பாடி ஒன்றியக் குழு தலைவர் திவ்யா கமல் பிரசாத், துணைத் தலைவர் கஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஷீலாஜெயசீலன் வரவேற்றார்.

இதில் விவசாயிகளுக்கு இடு பொருட்கள், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள், சத்துமாத்திரைகள் வழங்கப்பட்டது. கால்நடைகளுக்கு தடுப்பூசியும் போடப்பட்டது.

முகாமில் 247 கடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கால்நடைத்துறை உதவி இயக்குநர் அந்துவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேஷ், வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் மகேந்திரகுமார், வேலூர் தாசில்தார் செந்தில், வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாளன், பானுமதி, ஆவின் துணை பொது மேலாளர் கோதண்டராமன், கால்நடை மருத்துவர் மணிகண்டன், உதவி மருத்துவர் ஹேமலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story