ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் ்தொடங்கிவைத்தார்.
வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் வேலூர், அணைக்கட்டு, பேரணாம்பட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைகளில் நடந்தது. வேலூர் வட்டார ரேஷன்கடை ஊழியர்களுக்கு பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் நடந்தது. மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, கூட்டுறவு இணைப்பதிவாளர் நந்தகுமார், துணைப்பதிவாளர் சரவணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் பூமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில், பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவினர், 37 பேருக்கு உடல் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இன்று (செவ்வாய்கிழமை) கணியம்பாடி வட்டாரத்தை சேர்ந்த ரேஷன்கடை ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.