தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்


தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
x

திருவத்திபுரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நகர தூய்மையான மக்கள் இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் மாதத்திற்கு 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக திருவத்திபுரம் நகராட்சியில் பணிபுரியும் 110 தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் கி.ரகுராமன் முன்னிலை வகித்தார்.

முகாமில் நாவல்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் ஷர்மிளா தலைமையிலான மருத்துவ குழுவினர், டாக்டர்கள் யோகேஸ்வரன், முருகேஷ் பரணி, சுருதி உள்ளிட்டோர் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

நிகழ்ச்சியில் நகரமன்ற துணைத்தலைவர் குல்சார், நகராட்சி மேலாளர் ராமலிங்கம், துப்புரவு அலுவலர் சீனிவாசன், துப்புரவு ஆய்வாளர் மதனராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story