வைரஸ் காய்ச்சலை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்


வைரஸ் காய்ச்சலை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை வட்டாரத்தில் வைரஸ் காய்ச்சலை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வைதேகி கூறியதாவது:-

திருவாடானை வட்டாரத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலை தடுப்பதற்கு தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் கலெக்டர் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ஆகியோரின் ஆலோசனைபடி பள்ளிகள் மற்றும் கிராமப்புறங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களுக்கு தொண்டை வலி, உடல் வலி, காய்ச்சல், தும்மல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருக்கும். காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவரை அணுகி பரிசோதனை மற்றும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் நோயாளிகள் மருந்து கடைகளில் நேரடியாக மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது. தண்ணீரை காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து கொள்வது நல்லது. கைகளைஅடிக்கடி கழுவ வேண்டும். 5 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை இந்த காய்ச்சல் இருக்க வாய்ப்பு உள்ளது இதனால் பொதுமக்கள் நோயாளிகள் யாரும் அச்சப்பட தேவையில்லை. குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் தண்ணீரை அதிக அளவு குடிக்க வேண்டும் உப்பு சர்க்கரை கரைசல் நீர் குடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story