தஞ்சையில் இன்று நடக்கிறது: குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் 5 அமைச்சர்கள், 7 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு


தஞ்சையில் இன்று நடக்கிறது:  குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்  5 அமைச்சர்கள், 7 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு
x

குறுவை சாகுபடி தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில் 5 அமைச்சர்கள், 7 மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:-

குறுவை சாகுபடி தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில் 5 அமைச்சர்கள், 7 மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மேட்டூர் அணை திறப்பு

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு மே மாதத்திலேயே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டும் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என கூறி உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், பயிர்க்கடன் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், அரசு கொறடா கோவி.செழியன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

கூட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வேளாண், கூட்டுறவு, நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.


Next Story