சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகாம்
சிக்கல் ஊராட்சியில் நடந்த சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகாமை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
சிக்கல்:
சிக்கல் ஊராட்சியில் நடந்த சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகாமை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
சிறப்பு மருத்துவ முகாம்
நாகை மாவட்டம் சிக்கல் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கிதொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர்கவுதமன், எம்.எல்.ஏ.க்கள் முகமது ஷா நவாஸ், நாகை மாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பேசியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் சிறப்பு பன்னோக்கு மருத்து முகாம் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து நடைபெறுகிறது.
பரிசோதனை
நாகை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் அந்தந்த துறை சிறப்பு டாக்டர்களால் வழங்கப்படுகிறது. இதில் மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணிகளுக்கு ரத்த பரிசோதனை. ஸ்கேன், எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் பயனாளிகளுக்கு கண்ணொலி காப்போம் திட்டத்தின் கீழ் கண்கண்ணாடி 5 பேருக்கும், மக்களை தேடி. மருத்துவ திட்டத்தின் கீழ் 5 பேருக்கு மருந்து பெட்டகம், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் 10 பேருக்கு சஞ்சீவி பெட்டகம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங்., துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) விஜயகுமார், இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) ஜோஸ்மின்.அமுதா, ஒன்றியக்குழு உறுப்பினர் கவுரி ராஜேந்திரன், சிக்கல் ஊராட்சி மன்ற தலைவர் விமலா ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், ரேவதி, தாசில்தார் ராஜசேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.