வைகாசி விசாகம்: முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


வைகாசி விசாகம்:  முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைகாசி விசாகம்

வைகாசி மாதம் முருக பெருமானின் ஜென்ம நட்சத்திரமான விசாக நட்சத்திரம் அன்று வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் முருக பெருமானை வழிபட்டால் கிடைக்க கூடிய பலன், வைகாசி விசாக திருவிழாவில் வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

இதனால் பக்தர்கள் விரதம் இருந்து முருக பெருமானை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கிருஷ்ணகிரியில் பிரசித்தி பெற்ற காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில் காலையிலேயே சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திரளான பக்தர்கள் பங்கேற்பு

இதேபோல ஓசூர் வேல்முருகன் கோவில், அகரம் முருகன் கோவில், ஜெகதேவி முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோன்று வேப்பனப்பள்ளி அருகே உள்ள பச்சைமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜை நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story